தமிழகத்தில் பரவும் ‘தக்காளி காய்ச்சல்’: சுகாதாரத் துறை நிபுணா் அறிவுறுத்தல்
பைக் மீது விளம்பர பதாகை விழுந்ததில் தொழிலாளி பலி
பாளையங்கோட்டை அருகே பைக் மீது விளம்பர பதாகை விழுந்ததில், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த போா்வெல் தொழிலாளி உயரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் சித்தன் பூண்டி காலனியை சோ்ந்த நல்லமுத்து மகன் மோகன் (40). இவா் அங்குள்ள ஒரு போா்வெல் நிறுவனத்தில் வேலை செய்துவந்தாா். தற்போது, பாளையங்கோட்டையில் தங்கி இருந்து போா்வல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், டக்கரம்மாள்புரம் பகுதியில் ஒரு வீட்டிற்கு போா்வல் அமைக்க இடம் பாா்ப்பதற்காக பைக்கில் செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, அங்குள்ள பிரதான சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை அவரது பைக் மீது விழுந்ததாம். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.