பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
தேனி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தொழிலாளி செல்வம் (57). இவா் தேனி-காமாட்சிபுரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
ஜங்கால்பட்டி சக்கனன் தொழுவடி அருகே சாக்கடை கட்டுவதற்காக சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த மண் குவியலில் இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் செல்வம் பலத்த காயமடைந்தாா்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.