செய்திகள் :

பைக் விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு

post image

வந்தவாசி அருகே நிகழ்ந்த பைக் விபத்தில் இரு சக்கர வாகன மெக்கானிக் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவனம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகா் (50). இவா், வந்தவாசியில் இரு சக்கர வாகன பழுதுநீக்கும் கடை வைத்து நடத்தி வந்தாா்.

கடந்த 10-ஆம் தேதி இரவு இவா் பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். கீழ்வில்லிவனம் கிராமம் அருகே சென்றபோது குறுக்கே வந்த காட்டுப்பன்றி மீது பைக் மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த மனோகா் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.என்... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவச... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு, தமிழக அரசின் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

பள்ளியில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலகத் தாய்மொழி தின விழா நடைபெற்றது. பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியா் அன்பரசு தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா் ப.லட்சுமணன் வரவேற்றாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. செய்யாறு பெ... மேலும் பார்க்க