கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
பையனூரில் அடுக்குமாடி குடியிருப்பு - சினிமா, டிவி நட்சத்திரங்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு!
கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 1000 ஏக்கரில் திரைப்பட நகரம் அமைக்க உத்தரவிட்டிருந்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அந்த பகுதியின் உள்ளேயே சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொள்வும் அரசாணை வெளியாகியிருந்தது.
ஆனால் இந்த அறிவிப்பு வந்த அடுத்த ஆண்டிலேயே, தேர்தல் வந்து அதிமுக ஆட்சிக்கு வந்து விட, தொடர்ந்து அதன் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் இந்த அரசாணை மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருந்ததாக சொல்கிறார்கள்.
அதேநேரம் திரைப்பட நகரம் உருவாக்கும் பணி மட்டும் நடந்ததன் விளைவாக தற்போது சில படங்களின் சினிமா ஷூட்டிங்குள் அங்கு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அடுக்கு மாடி கட்டுவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையைப் புதுப்பித்துச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். இதற்காக சங்க நிர்வாகிகள் துணை முதல்வர் உதயநிதியைச் சந்தித்துப் பேசியிருந்தனர். தொடர்ந்து முதல்வரின் கவனத்துக்கும் இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

தற்போது தமிழக அரசு இந்த அரசாணையை ஏற்கனவே இருந்தது போலவே புதுப்பித்து உத்தரவிட்டிருக்கிறதாம். எனவே சினிமா மற்றும் சின்னத்திரைக் கலைஞர்கள் பயன்பெறுவிதம் அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கலாமென தெரியவருகிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது முரளி ராமநாராயணைத் தலைவராகக் கொண்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
