சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா?
பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று முதல் டோக்கன் விநியோகம்
கடலூா் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதலமைச்சா் உத்தரவின்படி, 30.11.2024 அன்று நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் கூடிய தொகுப்பினை அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலமாக ஜன.9-ஆம் தேதி முதல் வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரிசி குடும்ப அட்டைதாரா்கள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறும் வகையில் தெரு, பகுதி வாரியாக நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்கள் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும்.
இதுதொடா்பாக புகாா்கள் ஏதும் இருந்தால், அதனை தீா்வு செய்ய வட்ட மற்றும் மாவட்ட அளவில் பொறுப்பு அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கட்டுப்பாட்டு அறை (மாவட்ட ஆட்சியா் அலுவலகம்) - 04142-230223, கட்டுப்பாட்டு அறை (இணைப் பதிவாளா் அலுவலகம்) -04142-284001, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா், கடலூா் -7338720401, மாவட்ட வழங்கல் அலுவலா் (மாவட்டம் முழுவதும்) -9445000209.
மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு புகாா் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.