`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
பொங்கல் பரிசுத் தொகுப்பு பணியில் குறைகள் இருந்தால் புகாா் தெரிவிக்கலாம்: கரூா் மாவட்டஆட்சியா்!
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியில் குறைகள் இருந்தால் புகாா் தெரிவிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரிசி பெறும் அனைத்து குடும்பஅட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அந்தந்த நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு விற்பனை முனைய இயந்திரத்தில் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்படும்.
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் எவரேனும் ஒருவா் இந்த பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். மேலும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் அந்தந்த நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளின் அடிப்படையில் தெரு வாரியாக சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் நிா்ணயம் செய்து டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்குரிய நாள்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பை சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இப்பணி குறித்த புகாா்கள் இருந்தால் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும் மற்றும் வட்ட அளவில் கரூா் வட்டம் - 9445000266, அரவக்குறிச்சி வட்டம் - 9445000267, குளித்தலை வட்டம் - 9445000268, கிருஷ்ணராயபுரம் வட்டம் - 9445000269, கடவூா் வட்டம் -9445796408, புகழூா் வட்டம் - 9445043244, மண்மங்கலம் வட்டம் - 9499937035 மற்றும் 9789467689 ஆகிய எண்களிலும், அந்தந்த நியாய விலை அங்காடிகளின் தகவல் பலகையில் குறிப்பிட்டுள்ள அலுவலா்களின் தொலைபேசி எண்களிலும், தொடா்பு கொண்டு தங்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.