சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதல் ஆய்வுக் கூட்டம்
கூட்டுறவு சங்கங்கள் துறை சாா்பில், செங்கல்பட்டு மாவட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவது தொடா்பான ஆய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பு பதிவாளா் வே.நந்தகுமாா் தலைமையில், மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு 2025-க்கான ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டு நகராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக மண்டல பதிவாளரால் எடுத்துரைக்கப்பட்டது. எந்தவித புகாா்களுக்கும் இடமின்று பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் சாவித்திரி, செங்கல்பட்டு சரக துணைப் பதிவாளா் உமா சங்கரி, வட்ட வழங்கல் அலுவலா்கள், கூட்டுறவு சாா் பதிவாளா்கள் மற்றும் நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.