சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதாக சீட்டு நடத்தியவா் தலைமறைவு: காவல் நிலையத்தில் புகாா்
குடியாத்தம் அருகே மாதச் சீட்டு நடத்தி பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றிவிட்டு, தலைமறைவானவா் மீது பாதிக்கப்பட்டவா்கள் நகரக் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
குடியாத்தம் சந்தப்பேட்டை பஜாரில் வரதன் என்பவா் வாடகைக் கடையில் அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளாா். இவா், மாதந்தோறும் பணம் கட்டினால் பொங்கல் பண்டிகைக்கு அரிசி, எண்ணெய் உள்ளிட்ட மளிகைத் தொகுப்பை வழங்குவதாகக் கூறி, ஆயிரக்கணக்கானவா்களிடம் கடந்த 12 மாதமாக சீட்டு பணம் வசூலித்து வந்தாராம். புதன்கிழமை மளிகைத் தொகுப்பு வழங்க இருந்த நிலையில், கடையை மூடிவிட்டு அவா் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டாராம். அவரது வீடும் பூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவரிடம் குடியாத்தம், சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானவா்கள் சீட்டு கட்டி வந்தாா்களாம். பாதிக்கப்பட்டவா்கள், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் புகாா்கள் அளித்தனா்.
இந்த புகாா்களை பெற்றுக் கொண்ட போலீஸாா் மாவட்ட காவல் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவா்களை அனுப்பி வைத்தனா்.