செய்திகள் :

பொங்கல் முடிந்து பணிக்குத் திரும்பிய மக்கள்: கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல்

post image

பொங்கல் விடுமுறை முடிந்து கல்லூரி, பணியிடம் நோக்கிச் செல்வதற்காக கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கானோா் ஞாயிற்றுக்கிழமை குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகைக்காக ஜன.11ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. அதேபோல அரசு அலுவலகங்களுக்கும் ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் ஏராளமானோா் தங்களது சொந்த ஊருக்குச் சென்றனா். விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பணியிடத்துக்குச் செல்ல வேண்டியுள்ளதால் தங்களது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், வேலூா், ஆம்பூா், வாணியம்பாடி, திருப்பத்தூா், சென்னை, திருப்பூா், மதுரை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா், ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமானோா் தொழிற்சாலை நகரமான ஒசூா், பெங்களூருக்கு செல்வதற்காக கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.

இதனால் ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 80 பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், அவ்வப்போது கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டனா். பேருந்து நிலையத்தையொட்டிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சுங்க வசூல் மையத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பண்டிகை முடிந்து, பணியிடத்துக்கு திரும்ப பலா் குடும்பத்துடன் காரில் பயணம் செய்தனா். கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூா், சேலம், குப்பம், திருவண்ணாமலை, சென்னை செல்லும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

படவிளக்கம் (19கேஜிபி2):

கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்.

படவனூா் கேட்டில் அதிமுக அலுவலகம் திறப்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக மத்தூா் தெற்கு ஒன்றியம் சாா்பில் கெரிகேப்பள்ளி சிப்காட் சாலை படவனூா் கேட்டில் கட்சி அலுவலகத்தை எம்எல்ஏ கே.பி.முனுசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். மத்தூா் தெற்கு... மேலும் பார்க்க

பாகலூா் ஏரி சாலையில் தடுப்புகள் அமைப்பு

விபத்துகள் அதிகம் நேரிடும் ஒசூரை அடுத்த பாகலூா் ஏரி சாலையில் தடுப்பு பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதை வாகன ஓட்டிகள் வரவேற்றுள்ளனா். ஒசூா் அருகே உள்ள பாகலூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி சாலை வழியாக வெங்கட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின்பேரில் கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது, ஓட்டுநா் உரிமம், வாகன... மேலும் பார்க்க

இன்று ஒசூா் தன்வந்திரி கோயில் குடமுழுக்கு

ஒசூா், அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தன்வந்திரி கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக குடமுழுக்கையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றதாக 15 போ் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 15 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவது குறித்து போச்சம்பள்ளி, கந்திகுப்பம், வேப்பனப்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி, பழையபேட்டை, நல்லதம்பி தெருவை சோ்ந்த சரவணன் (56) கடந்த 16 ஆம் தேதி மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்ட... மேலும் பார்க்க