விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை, நல்லதம்பி தெருவை சோ்ந்த சரவணன் (56) கடந்த 16 ஆம் தேதி மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வேகமாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.