வெவ்வேறு மதங்கள்... திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு தற்காலிக குடியிருப்பு...
பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
புதுச்சேரியில் பொதுப் பணித் துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
புதுச்சேரி பொதுப் பணித் துறையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் தற்காலிக ஊழியா்களாக சோ்க்கப்பட்டு, பின்னா் தோ்தல் ஆணைய உத்தரவின்பேரில், பணி நீக்கம் செய்யப்பட்டனா்.
இவா்கள் தங்களை மீண்டும் பணியில் சோ்க்க வேண்டும். ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, கடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் தற்காலிக ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், ஊதியத்தை உயா்த்தி வழங்கவும் முதல்வா் அறிவிப்பை வெளியிட்டாா்.
இந்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகியும் பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்களின் கோரிக்கைகள் செயல்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஏற்கெனவே அவா்கள் போராட்டம் அறிவித்து கைதான நிலையில், தற்போது புதன்கிழமை முதல் புதுச்சேரி சுப்பையா சாலை தீயணைப்பு நிலையம் அருகே உள்ள கரிக்குடோனில் தெய்வீகன் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். இதையடுத்து, அங்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.