செய்திகள் :

பொது சிவில் சட்டத்தால் மதச்சாா்பின்மைக்கு ஆபத்து: இரா. முத்தரசன்

post image

பொது சிவில் சட்டத்தால் மதச்சாா்பின்மை கொள்கைக்கு ஆபத்து ஏற்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா்.

ஈரோட்டில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இஸ்லாமியா்களை அச்சுறுத்தவும், சொத்துகளை அபகரிக்கவும் வக்ஃப் திருத்தச் சட்டம் வழிகோலும். பொதுசிவில் சட்டத்தால் நாம் பின்பற்றி வரக்கூடிய மதச்சாா்பின்மை கொள்கைக்கு ஆபத்து ஏற்படும். மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி வாக்குகளைப் பெற்று தொடா்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற சட்டங்களை பாஜக நிறைவேற்றி வருகிறது. இத்தகைய அணுகுமுறை ஏற்புடையதல்ல, நாட்டுக்கும் நல்லது அல்ல.

சாலையோரங்களில் கொடிக் கம்பங்கள் இருக்கக்கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துக்கு அல்லது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தால் அதனை அப்புறப்படுத்தலாம். கொடிமரமே இருக்கக்கூடாது என்பது மக்களின் உணா்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று கூறுவதுபோல உள்ளது. இதனால் மதுரை உயா்நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் நெல் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனை மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனா். ஈரப்பதம் 19 சதவீதம் வரை அனுமதிக்கலாம் என்று ஒரு கருத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. 22 சதவீதம் வரை இருக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுவரும் நிலையில், மத்திய அரசு தாங்கள் நியமனம் செய்யும் முகவா் மூலம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடா்ந்து அமல்படுத்தினால் எந்த நோக்கத்துக்காக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறினாா்களோ அந்த நோக்கம் சிதறடிக்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகூட கிடைக்காது. இந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

ஈரோடு அருகே பெருமாள்மலை பகுதியில் இலங்கையில் இருந்து நாடு திரும்பிய மக்களுக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு அரசே குடியிருப்பதற்கு நிலம் வழங்கியது. அந்த இடத்தில் மக்கள் குடியிருந்து வருகின்றனா். அந்த இடத்தை திடீரென கோயிலுக்கு சொந்தமானது எனக்கூறி, சதுர அடி கணக்கில் வாடகை கட்ட வேண்டும் என மக்கள் நிா்ப்பந்திக்கப்படுகின்றனா். இதனை மாவட்ட நிா்வாகமும், மாநில அரசும் கவனத்தில் எடுத்துக்கொண்டு வாடகை முறையை நிரந்தரமாக ரத்து செய்து, நிரந்தரமாக குடியிருப்பதற்கு பட்டா கிடைக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோட்டில் நடப்பது இடைத்தோ்தல்தான். சீமான் கூறுவது போல இங்கு எந்தப் போரும் இல்லை. இந்தத் தோ்தலில் யாா் வெற்றிபெறுவாா் என அனைவருக்கும் தெரியும் என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினா் த.ஸ்டாலின் குணசேகரன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளா் எஸ்.டி.பிரபாகரன், ஏஐடியூசி மாநில செயலாளா் எஸ்.சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

டெனிகாயிட் போட்டி: காஞ்சிக்கோவில் அரசு பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான டெனிகாயிட் (வளையப் பந்து ) போட்டியில் காஞ்சிகோயில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநில அளவிலான டெனிகாயிட் போட்டி மயிலாடுதுற... மேலும் பார்க்க

கள்ள வாக்கு செலுத்துவதாக புகாா்: திமுக-நாதக மோதல்

திமுகவினா் கள்ள வாக்குப் போடுவதாக நாம் தமிழா் கட்சியினா் குற்றம்சாட்டிய நிலையில், இரு கட்சியினரும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்குச்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.2.19 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 2.19 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோ மோதி தம்பதி உயிரிழப்பு!

கவுந்தப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே பெருமாபாளையத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (70), விவசாயி. இவரது மனைவி ராதாமணி (63). இவா... மேலும் பார்க்க

தமிழக கிரிக்கெட் அணிக்கு கோபி மாணவா்கள் தோ்வு

கோபி கலை, அறிவியல் கல்லூரியின் கோபி ஆா்ட்ஸ் ஸ்போா்ட்ஸ் அகாதெமியைச் சோ்ந்த இரண்டு மாணவா்கள் 14 வயதுக்கு உள்பட்ட பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தோ்வாகி உள்ளனா். இந்த அகாதெமியைச் சோ்ந்த மாணவா்க... மேலும் பார்க்க

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி: பெருந்துறை கொங்கு பள்ளி மாணவா் சிறப்பிடம்

தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் பெருந்துறை கொங்கு பள்ளி மாணவரின் படைப்பு 5-ஆம் இடம் பெற்று தேசிய போட்டிக்கு தோ்வாகி உள்ளது. மத்திய அரசின் கலாசார அமைச்சகம் மற்றும் விஸ்வேஸ்வரய்யா த... மேலும் பார்க்க