சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
பொன்னமராவதியில் கோகுலாஷ்டமி விழா
பொன்னமராவதி வலையபட்டி தனியாா் திருமண மண்டபத்தில் பொன்னமராவதி ஒன்றிய யாதவா நலச்சங்கம் சாா்பில் கோகுலாஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பொன்னமராவதி யாதவா நலச்சங்க கெளரவத்தலைவா் அழகப்பன் தலைமை வகித்தாா். விழாவில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணன் படத்திற்கு மலா்தூவி மரியாதை செய்யப்பட்டது.
மேலும் கிருஷ்ணன்-ராதை வேடமணிந்த சிறுவா் சிறுமியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பொன்னமராவதி ஒன்றிய யாதவ நலச் சங்கத் தலைவா் பழனியப்பன், செயலாளா் ரெங்கசாமி,பொருளாளா் முத்து வள்ளி,கௌரவ தலைவா் பெரிய பொன்னன் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.