புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை-யில் நண்பருடன் இருந்த மாணவியிடம் அத்துமீறல் – மூடி...
பொய்கூறி விடுப்பு எடுப்பவர்களைக் கண்காணிக்கும் துப்பறிவாளர்கள்!
ஜெர்மனியில் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதன் உண்மைத்தன்மையை அறிய துப்பறியும் அதிகாரிகளை நிறுவனங்கள் நியமித்து வருகின்றன.
ஜெர்மனியில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களின் நோய்வாய்ப்பட்ட விடுப்பு (Sick Leave) விகிதம் தொடர்ந்து வருவதாக பல நிறுவனங்கள் கூறி வந்தன. இந்த நிலையில், பணியாளர்கள் உண்மையில் நோய்வாய்ப்பட்டிருக்கின்றனரா என்பதை அறிய துப்பறியும் அதிகாரிகளை நிறுவனங்கள் பணியமர்த்தி வருகின்றன.
பணியாளர்களின் வருகை பற்றாக்குறை அதிகரிப்பதால் நிறுவனங்களின் வரவு செலவுகளில் நிலைமை பாதிக்கப்படுவதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க:மெட்டா பணியாளர்களுக்கு ரூ. 4 கோடியுடன் பணிநீக்கம்!
ஜெர்மனியில், 2021 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் சராசரியாக 11.1 நோய்வாய்ப்பட்ட விடுப்பு நாள்களையும், 2023 ஆம் ஆண்டில் 15.1 நாள்களையும் கொண்டுள்ளனர். இந்த உயர் வருகை இல்லாமை விகிதத்தால், ஜெர்மனியில் 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 சதவிகிதம் குறைந்து, குறிப்பிடத்தக்க பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியது எனலாம்.
மேலும், 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் பணியாளர்கள் சராசரியாக 14.1 நோய்வாய்ப்பட்ட விடுப்பு நாள்களை எடுத்ததாக ஒரு சுகாதார காப்பீட்டு நிறுவனம் கூறியது. 2023 ஆம் ஆண்டில், தொழிலாளர்கள் தங்கள் பணிநேரத்தில் 6.8 சதவிகிதத்தை இழந்துள்ளனர்.