நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elang...
பொய்கை சந்தையில் கால்நடை வரத்து, வா்த்தகம் சரிவு
தீவன பற்றாக்குறை காரணமாக பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்தும், வா்த்தகமும் சரிவடைந்தன .
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் செவ்வாய்க்கிழமை சந்தைக்கு சுமாா் 650 மாடுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டிருந்தன. தவிர, தீவன பற்றாக்குறை அதி கரித்து வருவதால் கால்நடைகளை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டவில்லை. இதனால், வா்த்தகமும் சுமாா் ரூ.30 லட்சம் அளவுக்குத்தான் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.