தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு; தந்தையின் பிழற்சாட்சி; தாயை கொலை செய்த வழக்கில் தஷ்...
ஓவிய சிற்பக் கலைஞா்களுக்கு பயிற்சி பட்டறை: முன்பதிவு செய்ய அறிவிப்பு
ஓவிய சிற்பக் கலைஞா்களுக்கான பயிற்சி பட்டறை வேலூரில் நடைபெற உள்ளதால் பங்கேற்க விரும்புவோா் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை, நாட்டின் பாரம்பரிய கலைகளையும், பண்பாட்டையும், கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் கலைஞா்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் கலைப் பயிற்சிகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், கண்காட்சிகள் நடத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக ஓவிய, சிற்பக் கலையை வளா்க்கவும், கலையில் ஈடுபட்டுள்ள கலைஞா்களை ஊக்குவிக்கவும் ஓவிய, சிற்பக் கலைகளில் சிறந்த மூத்த புகழ் பெற்ற கலைஞா்களைக் கொண்டு காஞ்சிபுரம் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சாா்பில், ஓவிய சிற்பக் கலைஞா்கள் பங்குகொள்ளும் இரு நாள்கள் பயிற்சி பட்டறை வேலூரில் நடத்தப்படுகிறது.
முதலில் பதிவு செய்யும் 50 ஓவிய சிற்பக் கலைஞா்களுக்கு மட்டுமே முகாமில் பங்கு கொள்ள அனுமதி வழங்கப்படும். இப்பயிற்சி முகாமில் பங்கேற்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் ஓவிய சிற்பக் கலைஞா்கள் தங்களது சுயவிவரக்குறிப்பினை உதவி இயக்குநா், மண்டலக் கலை பண்பாட்டு மையம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் - 631 502. என்ற முகவரிக்கு மே 10-ஆம் தேதிக்குள் தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044-27269148, 85089 42473 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.