முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
போதை ஊசி, மாத்திரைகளை பயன்படுத்தியதாக 3 இளைஞா்கள் கைது
குடியாத்தம் அருகே போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாக 3- இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகே குடியாத்தம் கிராமிய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த 3- இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா்கள் கள்ளூா் பகுதியைச் சோ்ந்த அரவிந்த், சஞ்சய், மனோஜ் என்பதும், சோதனையில் அவா்களிடம் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை அவா்கள் பயன்படுத்துவதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ஊசி, மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.