செய்திகள் :

'பொருந்தாது; ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர..!' - கட்டாய தேர்ச்சி ரத்து குறித்து அன்பில் மகேஸ்

post image

'இனி 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து' என்ற மத்திய அரசின் நேற்றைய அறிவிப்பு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டிலும் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில், 'இந்த அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது' என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

"தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி நடத்தப்படும் ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கு, இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றாமல், நமது மாநிலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, நமது அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன. தமிழ்நாட்டில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனவே, தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் ஒன்றிய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...

நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல, ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைகளுக்கும் பாதுகாப்பாக அமையும். கல்வி தான் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தின் அடித்தளம். எனவே, மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் திராவிட மாடல் அரசின் இலக்கு. இந்த இலக்கை எய்தி, இந்தியத் துணைக் கண்டத்திற்கே, தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் தொடர்ந்து விளங்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து தொய்வின்றி, நமது அரசு முன்னெடுத்துச் செல்லும்" என்று கூறப்பட்டுள்ளது.

`கேரள, மணிப்பூர் உட்பட ஐந்து மாநில ஆளுநர்கள் மாற்றம்' - குடியரசுத் தலைவர் உத்தரவு

ஒடிசா ஆளுநரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு, கேரளா, ஒடிசா உட்பட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இரண்டு சமூகத்துக்கு மத்தியில் தொடர்ந்து வரும... மேலும் பார்க்க

Panama : பானாமா கால்வாய் பிரச்னையில் பாய்ச்சல் காட்டும் ட்ரம்ப் - ஒப்பந்த பின்னணியும் சிக்கலும்!

எச்சரித்த ட்ரம்ப்பனாமா கால்வாய்1880-ல் பிரெஞ்சு அரசால் தொடங்கப்பட்டு, பின்னர் நிதி பிரச்னையால் கைவிடப்பட்ட பனாமா கால்வாய் திட்டத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா கையிலெடுத்து கட்டி முடித்தது. அப்ப... மேலும் பார்க்க

'பாசிச சக்திகளை அனுமதிக்காத தமிழக மக்களை பாரட்டுகிறேன்' - கிறிஸ்துமஸ் விழாவில் தெலங்கானா முதல்வர்!

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27-வது கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. புண்ணியம் பகுதியில் இருந்து அருமனை வரை ஊர்வலம் நடைபெற்றது. அதில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன... மேலும் பார்க்க

`அம்பேத்கரை இழிவாக பேசிய அமித் ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!' - கரூர் எம்.பி ஜோதிமணி

கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி ஜோதிமணி, ``அமித் ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி இழிவாக பேசியுள்ளார். இது, நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேருவை நேரடியாகயும், அம்பேத்கரை மறைமு... மேலும் பார்க்க

``நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்; அதற்காக..." - ஒட்டன்சத்திரம் ஐ.டி ரெய்டு குறித்து அண்ணாமலை

வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் செந்தில்குமார் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர்.நிதி நிறுவனம் நடத்திவரும் செந்தில்குமார், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாம... மேலும் பார்க்க

கட்சிக்குள் இருக்கும் பிசுறுகளை ஊதிப் பறக்கவிட வேண்டும் - சீமான் பேச்சால் மீண்டும் சர்ச்சை

நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சியில் `அண்ணனுடன் ஆயிரம் பேர்’ என்ற நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 22-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் ``நிர்வாகிகள் வெளியேறுவதால் வாக்கு சதவீதம் குறையாது, இன்னும் கட்சிக்கு... மேலும் பார்க்க