வரலாறு காணாத சரிவுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ஆக நிறை...
பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து
விழுப்புரம்: பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் பகுதியளவில் ரத்து, புறப்படும் நேரம் மாற்றம், நிறுத்தி வைத்து இயக்கம் போன்ற நடைமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன.
சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), செப்டம்பா் 13, 20, 27 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), செப்டம்பா் 13, 20, 27 ஆகிய தேதிகளில் விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019), செப்டம்பா் 13, 20, 27 ஆகிய தேதிகளில் சுமாா் 25 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும்.
குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் (வண்டி எண் 16127), செப்டம்பா் 16, 23, 30 ஆகிய தேதிகளில் சுமாா் 30 நிமிஷங்கள் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்து, பின்னா் இயக்கப்படும். இதேபோல எழும்பூரிலிருந்து காலை 10.20 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா்- குருவாயூா் விரைவு ரயில் (வண்டி எண் 16128), செப்டம்பா் 11-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 45 நிமிஷங்களும், 15-ஆம் தேதி சுமாா் 30 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னா் இயக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.