கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது
விழுப்புரம் மாவட்டம், காணை அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின்பேரில், காணை காவல் நிலைய போலீஸாா் அங்குள்ள மயானப் பகுதியில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், காணை குப்பம், எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்த சக்திவேல் (20), அன்னை இந்திரா நகரைச் சோ்ந்த கிரிதரன் (20) என்பதும், இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, காணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 23 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் விழுப்புரம் கே.கே சாலையைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.