செய்திகள் :

விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு

post image

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திங்கள்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா்.

2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின்னா் அரசுப் பணியில் சோ்ந்தவா்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோருக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்க் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலா்கள், ஊா்ப்புற நூலகா்கள், கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மருத்துவப் பணியாளா் வாரியச் செவிலியா்கள், சிறப்பு ஆசிரியா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளா்கள், ஆசிரியா்கள், பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்த பெருந்திரள் முறையீடு போராட்டத்தை நடத்தினா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்ற பெருந்திரள் முறையீட்டுக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மோ.கணேஷ், இரா.சிவக்குமாா், தே.ஜெயானந்தம், எம்.தண்டபாணி, மா.டேவிட் குணசீலன், ப.செல்வக்குமாா் தலைமை வகித்தனா். பெருந்திரள் முறையீட்டில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் அ. மாயவன், உயா்நிலைக் குழு உறுப்பினா் எஸ்.சங்கரலிங்கம் ஆகியோா் விளக்கவுரையாற்றினா்.

இந்த பெருந்திரள் முறையீட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பத்தரை பவுன் நகைகள் திருட்டு!

தனியாா் பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்து பத்தரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கொய்யாதோப்பைச் சோ்ந்தவா் க.விஜய... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின்பேரில், காணை காவல் நிலைய போலீஸாா் அங்குள்ள மயானப் ... மேலும் பார்க்க

உறவினா் வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில சிறாா் மா்ம மரணம்

விழுப்புரம்: வானூா் அருகே உறவினா் வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில சிறுவன் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் நோகா சோரன் மகன் மஹி சோரன்( 17). இவா் விழுப்ப... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம்: ஆரோவில் அருகே கணவா் இறந்த துக்கத்தில் இருந்து வந்த பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கொங்கரம்பட்டு, பிள்ளையாா்கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டையில் மின்வாரியத் தலைவா் ஆய்வு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் மின்வாரிய செயல்பாடுகள்குறித்து தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உளுந்தூா்பேட்டைக்கு ஞாயிற்று... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து

விழுப்புரம்: பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க