பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம்: ஆரோவில் அருகே கணவா் இறந்த துக்கத்தில் இருந்து வந்த பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கொங்கரம்பட்டு, பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் மனைவி அபிராமி (35). இவா்களுக்குத் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு மகன், மகள் உள்ளனா்.
சிவக்குமாா் கடந்த 2 வருடங்களுக்கு முன்னா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்து விட்டாா். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் , ஆரோவில் காவல் சரகத்துக்குள்பட்ட வாழ்பட்டாம் பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்த அபிராமி தனது கணவா்சிவக்குமாா் இறந்த மன வருத்தத்தில் திங்கள்கிழமை வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்த புகாரின் பேரில், ஆரோவில் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.