செய்திகள் :

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை!

post image

போராட்டத்தால் சிதைந்து போன நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் கலவரமாக வெடித்தது.

கலவரத்தில் நேபாள முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ராகர் செவ்வாய்க்கிழமை(செப். 9) உயிரிழந்தார். காத்மாண்டுவிலுள்ள டல்லு பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதில் வீடு தீக்கிரையானது.

இந்தச் சூழலில், மிகுந்த சிரமத்துக்கிடையே உயிருடன் வெளியே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்யலக்‌ஷ்மி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்தத் தகவலை அவர்தம் குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Rajyalaxmi Chitrakar, the wife of Nepal's ex-prime minister Jhalanath Khanal, died on Tuesday after protesters, led by Gen Z, trapped her in their home and set the house on fire. 

முன்னாள் அதிபா்களுக்கான சலுகைகள் பறிப்பு

இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய... மேலும் பார்க்க

நாா்வே தோ்தலில் தொழிலாளா் கட்சி வெற்றி

நாா்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஜோனாஸ் காா் ஸ்டோரின் தொழிலாளா் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து, 28 சதவீத வாக்குகளைப் பெற்... மேலும் பார்க்க

கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்!

கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் படைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கத்தார் அரசு எதிர்வினையாற்றியுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (செப். 9) வான் வழியாக தீவிர தாக்குதல் நடத்தப்பட்டதால்... மேலும் பார்க்க

கத்தாரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் தலைவர்கள் பலி?

கத்தாரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (செப். 9) வான் வழியாக தீவிர தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.... மேலும் பார்க்க

2025-க்கான இபி-1 க்ரீன் கார்டு விசா நிறைவு: அமெரிக்கா

வெளிநாடுகளிலிருந்து அதிதிறன் பெற்ற ஊழியர்கள், அமெரிக்கா செல்வதற்கு மேலும் ஒரு தடைக்கல்லை அமெரிக்க குடியுரிமைத் துறை ஏற்படுத்தியிருக்கிறது.அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை வெளியிட்டிர... மேலும் பார்க்க

நேபாள அதிபர் ராம் சந்திர பௌடேல் ராஜிநாமா!

நேபாளத்தில் தலைவிரித்தாடும் ஊழல், பொருளாதார சீரழிவுக்காக அரசைக் கண்டித்து நேபாள இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில், அந்நாட்டு அதிபர் ராம் சந்திர பௌடேலும் தனது பதவியை ராஜிநாமா செய்திர... மேலும் பார்க்க