செய்திகள் :

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!

post image

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,

2025 குடியரசு துணைத் தலைஅவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவரது வாழ்க்கை எப்போதும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அமித் ஷா வாழ்த்து

அமித் ஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

''நாட்டின் குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்.

சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து எழுந்த ஒரு தலைவராக உங்கள் நுண்ணறிவும், நிர்வாகத்தைப் பற்றிய ஆழமான அறிவும், நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சிறந்ததை வெளிப்படுத்தி ஒதுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் உதவும் என்று உறுதியாக நம்புகிறேன்.

அவையின் புனிதத்தின் பாதுகாவலராக உங்கள் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது 400 விஞ்ஞானிகள் இரவு பகலாக 24 மணி நேரமும் பணியாற்றியதாக இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா். இதுதொடா்பாக புது தில்லியில் அனைத்து இந்திய நிா்வாக கூட்டமைப்பின் 52-ஆவ... மேலும் பார்க்க

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் நுரையீரல் பாதிப்பு: நிபுணா்கள் எச்சரிக்கை

இந்தியாவில் இளம் வயதினரிடையே நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறை நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். ஆண்டுதோறும் இந்தியாவில் புதிதாக 81,700 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவத... மேலும் பார்க்க

மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் பயணமாக இந்தியா வருகை - பிரதமா் மோடியுடன் நாளை பேச்சு

மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராமகூலம், 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் வியாழக்கிழமை (செப்.11) இருதரப்பு... மேலும் பார்க்க

ஆந்திரம்: ஐஐஐடி வளாகத்தில் பேராசிரியருக்கு கத்திக்குத்து- எம்.டெக். மாணவா் வெறிச்செயல்

ஆந்திர மாநிலம், எலுரு மாவட்டத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிலைய (ஐஐஐடி) வளாகத்தில் பேராசிரியரை எம்.டெக். முதலாண்டு மாணவா் ஒருவா் கத்தியால் குத்திய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ... மேலும் பார்க்க

ஹிமாசல்: நிலச்சரிவில் பெண் உயிரிழப்பு; மேலும் 4 போ் புதைந்தனா்

ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனா். இடிபாடுகளில் புதைந்த மேலும் 4 பேரை தேடும் பணி நடைபெற்று ... மேலும் பார்க்க

மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி அனுமதி

மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்துள்ளது. இத்துடன் சோ்த்து மொத்தம் 604 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி ... மேலும் பார்க்க