புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!
மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து: கடலில் மூழ்கி மீனவா் உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பைபா் படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா், கடலில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியாா் சாவடி, மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் மு. மணிபால் (65), மீனவா். இவா், திங்கள்கிழமை அதிகாலை தனது படகில் கடலுக்குள் சென்று சின்ன முதலியாா் சாவடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது கடல் அலை சீற்றத்தில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மணிபாலுக்கு காயம் ஏற்பட்டு கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதையடுத்து, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்கள் இறந்து போனவரின் சடலத்தை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனா். பின்னா் போலீஸாா் மணிபாலின் சடலத்தை கைப்பற்றி புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.