செய்திகள் :

``பொற்கோயில் மீது பாகிஸ்தான் ஏவுகணை ஒன்று கூட தாக்காமல் முறியடித்தோம்'' - விவரிக்கும் மேஜர் ஜெனரல்!

post image

பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை அழிக்க மத்திய அரசு ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி இரவு அதிரடியாக தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் கடந்த 8-ம் தேதி அதிகாலை இந்தியா மீது தாக்க ஆரம்பித்தது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக ஏவுகணைகளை கொண்டும், ட்ரோன்களை கொண்டும் இத்தாக்குதலை நடத்தியது.

இத்தாக்குதலின் போது அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோயிலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்கியது. ஆனால் அத்தாக்குதலை வெற்றிகரமாக இந்திய விமானப்படையும், ராணுவமும் சேர்ந்து முறியடித்தது.

இது குறித்து மேஜர் ஜெனரல் கார்த்திக் கூறுகையில், ''பாகிஸ்தான் ராணுவம் அமிர்தசரஸில் உள்ள ராணுவ நிலைகள், எல்லையையொட்டிய மக்கள் குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதில் அமிர்தசரஸ் பொற்கோயிலை தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக அறிந்து கொண்டோம். எனவே கூடுதலாக ஏவுகணை தடுப்பு சாதனங்களை நிறுத்தினோம்.

நாங்கள் எதிர்பார்த்தது போல் 8-ம் தேதி அதிகாலை நேரத்தில் மிகவும் இருள் சூழ்ந்திருந்த நேரத்தில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் பொற்கோயிலை குறிவைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.

அத்தாக்குதலை தடுக்க ஏற்கெனவே நாங்கள் முழு அளவில் தயாராக இருந்தோம். எனவே பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவுகணை தடுப்பு சாதனங்கள் மூலம் சுட்டுவீழ்த்தினோம். இதனால் பொற்கோயில் மீது ஒரு ஏவுகணை கூட தாக்காமல் பார்த்துக்கொண்டோம்.

இந்திய ராணுவம் 9 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 7 இடங்களில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

Operation Sindoor
Operation Sindoor

லாகூர் அருகில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைமையகம், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஸ் இ மொகமத் தீவிரவாத முகாம்கள் சரியாக குறிவைத்து அழிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தையோ அல்லது பொதுமக்களையோ குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தவில்லை''என்று தெரிவித்தார்.

இந்திய வான் தடுப்பு சாதனங்கள் பாகிஸ்தானுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தி அழித்தன. 7-ம் தேதி தொடங்கிய தாக்குதல் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது.

`ஒரு வருடத்துக்கு லீவ்; ஆனா, முழு சம்பளம்' - சீன நபருக்கு அடித்த ஜாக்பாட்; எப்படி தெரியுமா?

தான் வேலை செய்யும் நிறுவனத்தில் 365 நாட்கள் ஊதியத்துடன் சேர்ந்த விடுப்பை குலுக்கலில் வென்றுள்ளார் ஒருவர். சீனாவைச் சேர்ந்த அவர், நிறுவனத்தின் நிர்வாகி பொறுப்பில் இருக்கிறார். '365 நாட்கள் ஊதியத்துடன் ... மேலும் பார்க்க

Bryan Johnson: `இளமை திரும்புதே...' வயதை ரிவர்ஸ் செய்ய முயற்சி; தொழிலதிபர் பகிர்ந்த வீடியோ

முக்கிய குறிப்பு: மருத்துவர்களின் பரிந்துரையின்றி எவ்வித சிகிச்சையையும் மேற்கொள்ளக் கூடாது. அது சட்டத்திற்குப் புறம்பானது. அமெரிக்காவில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பவர் பிரையன் ஜா... மேலும் பார்க்க

இந்திய முறைப்படி மஞ்சள் பூசி, கிரேக்க முறைப்படி திருமணம் செய்த இளவரசி.. வைரலாகும் புகைப்படம்!

கிரேக்கத்தில் 1973-ம் ஆண்டு முடியாட்சி ஒழிப்பு அறிவிக்கப்பட்டபோது மன்னராக இருந்தவர் மன்னர் கான்ஸ்டன்டைன். இவர்தான் கிரேக்கத்தின் கடைசி மன்னர். முடியாட்சி ஒழிக்கப்பட்டாலும் மன்னர் குடும்பத்தினர் சடங்கு... மேலும் பார்க்க

Kashmir: `ஒன்றாக பிறந்த இரட்டையர்கள்' பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பலியான சோகம்..

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில், பாதுகாப்பு படையின... மேலும் பார்க்க

ஹைதராபாத் `கராச்சி பேக்கரி'-க்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதா? - உரிமையாளர் சொன்ன பதில்!

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பிரபல பேக்கரி கடையான `கராச்சி பேக்கரி' கடந்த சில நாள்களுக்கு முன்பு தாக்கப்பட்டது. பாகிஸ்தானின் பெயர் இருந்ததாலேயே இந்த க... மேலும் பார்க்க

எல்லா மருந்துச் சீட்டுகளிலும் இடம்பெறும் ``RX'' என்ற வார்த்தை.. மருத்துவர்கள் எழுதுவது ஏன்?

மருத்துவர்களின் எழுத்து மொழி பெரும்பாலும் நமக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கும். குறிப்பாக நோயுற்ற நபர்களுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துச் சீட்டில் உள்ள சுருக்கெழுத்து நமக்கு புரியாத புதிராக இ... மேலும் பார்க்க