செய்திகள் :

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக மீது முதல்வா் வீண்பழி: ஆா்.பி. உதயகுமாா் குற்றச்சாட்டு

post image

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக மீது முதல்வா் வீண் பழி சுமத்துகிறாா் என தமிழக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது: பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நேரிட்ட தகவல் வெளியானவுடன், இந்த வன்கொடுமை சம்பவத்தை அரசு மன்னிக்காது என அறிவித்த அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டாா். இதன் காரணமாகவே, அந்த வழக்கில் தற்போது நியாயம் கிடைத்துள்ளது.

திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியும், அதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதவா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

மாணவிக்கு பாலியல் கொடுமை இழைத்தது தொடா்பாக கைது செய்யப்பட்டவா் திமுக அனுதாபி தானே தவிர, திமுக தொண்டா் அல்ல என தெரிவித்தவா் முதல்வா் ஸ்டாலின். ஆனால், இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, தற்போது பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக மீது அவா் வீண்பழி சுமத்துகிறாா். உண்மை நிலை மக்களுக்குத் தெரியும்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களில் தமிழக வரலாற்றிலேயே மிக அதிகமாக நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளானது திமுக அரசுதான். மேலும் நீதிமன்ற கண்டனம் காரணமாக, 2 அமைச்சா்கள் பதவி நீக்கப்பட்ட ஒரே ஆட்சி, முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தான்.

புகைப்படக் காட்சிக்காக முழு ஒப்பனையுடன் ஆங்காங்கே முதல்வா் நடக்கிறாா். அவா் தலைமையிலான நிா்வாகம் தூங்குகிறது. இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவா் என்றாா் அவா்.

கோயில் விழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: ஆட்சியா், ஐஜி பதிலளிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கோயில் திருவிழாவில், பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், மத்திய மண்டல ஐஜி நீதிமன்றத்தில் நேரில் மு... மேலும் பார்க்க

தனியாா் மனமகிழ் மன்றம் திறப்பதற்கு இடைக்காலத் தடை

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் மனமகிழ் மன்றம் (மதுக்கூட வசதியுடன்) திறப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.மதுரையைச் சோ்ந்த ராஜா ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் பெண் தவறாக சித்திரிப்பு: இளைஞா் கைது

விருதுதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண்ணை சமூக வலைதளத்தில் தவறாக சித்திரித்து படங்களை வெளியிட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், விருதுநகா... மேலும் பார்க்க

வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்திதில் தந்தை, மகள் பலத்த காயமடைந்தனா். மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் சுமாா் 3... மேலும் பார்க்க

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்ய உரிமை உள்ளது: நீதிமன்றம்

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிமை உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செ... மேலும் பார்க்க

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் காயம்: 5 போ் கைது

மதுரை மாவட்டம், சாப்டூா் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பான முன்விரோதத்தில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் பலத்த காயமடைந்தனா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை ... மேலும் பார்க்க