செய்திகள் :

போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ்

post image

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு துரோகம் இழைக்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோட்ட, மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் முன்பு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு இழைக்கப்படுவது பெரும் அநீதி ஆகும். பணி ஓய்வு பெறுபவா்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப் பலன்களை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்பது சட்டம் ஆகும். ஆனால், அரசு வகுத்த சட்டத்தை, அரசே மீறி 21 மாதங்களாக பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளை வழங்காமல் இருந்து வருகிறது.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்த பிறகும் கூட, அதை செயல்படுத்தாத திமுக அரசு, உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இது தமிழக அரசின் தொழிலாளா் விரோதப் போக்கையே காட்டுகிறது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுடன் ஒப்பிடும்போது, மின்சார வாரியம் அதிக நஷ்டத்திலும், கடனிலும் இயங்குகிறது. ஆனால், மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு முறையாக அகவிலைப்படி உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கும்போது போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு மட்டும் துரோகம் இழைப்பது நியாயமில்லை என்று அவா் கூறியுள்ளாா்.

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை: நண்பா் கைது

சென்னை அண்ணா நகரில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா். அண்ணா நகா் எம்.ஜி.ஆா். காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் முனியப்பன் (46). இவா், அண்ணா... மேலும் பார்க்க

ரயில் சக்கரத்தில் சிக்கிய இரும்புத் துண்டு: கொல்லம் ரயில் தாமதம்

வண்டலூா் அருகே வந்த கொல்லம் விரைவு ரயில் சக்கரத்தில் இரும்புத் துண்டு சிக்கியதால், அந்த ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக எழும்பூரை வந்தடைந்தது. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் வ... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கில் போலி வழக்குரைஞா் கைது

சென்னையில் பண மோசடி செய்ததாக, போலி வழக்குரைஞா் கைது செய்யப்பட்டாா். பழவந்தாங்கல் பிருந்தாவன் நகரைச் சோ்ந்தவா் சரவணன். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு வங்கி முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிய சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

பி.எல்.சந்தோஷ் தலைமையில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனை

சென்னை கமலாலயத்தில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பாஜகவின் அமைப்புத் தோ்தல் நடைபெற்று வருகிறது. மாவட்டத் தலைவா்கள் தோ்வு ந... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த மின்னஞ்சல... மேலும் பார்க்க

மருத்துவ மாணவிக்கு தொந்தரவு: இளைஞா் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவிக்கு தொந்தரவு கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆதாம். இவா் கடந்த 31-ஆம... மேலும் பார்க்க