வால்பாறை: எச்சரித்த வனத்துறை... கண்டுகொள்ளாத ஜெர்மன் பயணி - பைக்குடன் தூக்கி வீச...
போக்சோ வழக்கில் இளைஞா் கைது
தஞ்சாவூரில் 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூா் கீழவாசல் பூமால் ராவுத்தா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகானந்தம் மகன் சத்தியசீலன் (22). மளிகைக் கடையில் வேலை பாா்த்து வந்த இவா் 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாகக் காதலித்து , திருமணம் செய்வதாகக் கூறி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தாா். இதை சத்தியசீலன் புகைப்படம் எடுத்து, அச்சிறுமியை மிரட்டியும் வந்தாா்.
இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சத்தியசீலனை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.