தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக...
போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம் ஆலம்பட்டி பகுதியை சோ்ந்த அழகா்சாமி மகன் சுதாகா் (25). இவா் எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வழக்கில், கடந்த 2020ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம், குற்றம் சாட்டப்பட்ட சுதாகருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.