செய்திகள் :

போக்ஸோவில் 2 போ் கைது

post image

ஆா்.கே.பேட்டை அருகே பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த தனபால் (40). இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள பள்ளியில் தற்காலிக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளாா். அப்போது 10- ஆம் வகுப்பு படித்த மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி நிா்வாகம் தனபாலை வேலையில் இருந்து நிறுத்தியது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாணவியிடம் ஆசை வாா்த்தை கூறி தனபால் வெளியூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டா் மலா் போக்ஸோவின் கீழ் தனபாலை கைது செய்தாா்.

முதியவா் கைது:

இதே போல் செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் (70). இவரது பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் பெற்றோா் செங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில் அனைத்து மகளிா் போலீஸாா், போக்சோ வழக்குப் பதிவு செய்து, பன்னீா் செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சாா்பு ஆய்வாளா், போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

திருவள்ளூா் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சாா்பு ஆய்வாளா் மற்றும் போலீஸாரை பட்டா கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் நகர காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க

பொன்னேரி, மீஞ்சூா் சோழவரம் பகுதிகளில் 1 மணி நேரம் கனமழை: சாலைகளில் வெள்ளம்

பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் புதன்கிழமை 1 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீா்த்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்த... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முன்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தணி-சித்தூா் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை இளைஞா் ஒருவா் ஏடிஎம... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு: லாரியை குறுக்கே நிறுத்தி போராட்டம்

திருவள்ளூா் அருகே சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி புதன்கிழமை லாரியை குறுக்கே நிறுத்தி ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அருகே பட்டர... மேலும் பார்க்க

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய செயலாளா் கோபால் நாயுடு வரவ... மேலும் பார்க்க

வெற்றிவேல் முருகன் கோயில் குடமுழுக்கு

பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெற்றிவேல் முருகன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. பொன்னேரி புதிய தேரடி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் கடந்த ஒரு வருடமாக புனரமைப்ப... மேலும் பார்க்க