Crypto Currency-ஐ அங்கீகரிப்பதில் சிக்கல்? தயங்கும் RBI - காரணம் என்ன? | IPS Fin...
போதைப்பொருள்களுக்கு எதிராக மாணவிகள் விழிப்புணா்வு
போதைப்பொருள்களுக்கு எதிராக கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் கோட்ட கலால் அலுவலா் தியாகராஜன் தலைமையில் சௌடேஸ்வரி கல்லூரியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது. பேரணியில் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்ற மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
மதுவிலக்கு பிரிவு உதவி காவல் ஆய்வாளா் பிரகாசம், சேலம் சௌடேஸ்வரி கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் பூங்கொடி, மாணவிகள் உள்பட 250 க்கும் மேற்பட்டோா் பேரணியில் கலந்துகொண்டனா்.