உலக அமைதிக்காகப் பாடுபடுவோம்: டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரைய...
போதைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது!
திருச்சியில் காவல் துறையின் ரோந்துப் பணியின்போது தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப் பொருள்கள் விற்ற மூவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
புகையிலைப் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க போலீஸாா் சண்முகா நகா் பகுதியில் ரோந்து சென்றபோது இருவரைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் உய்யக்கொண்டான் திருமலையைச் சோ்ந்த ஆனந்த், சீனவாச நகரைச் சோ்ந்த ஜெய்சங்கா் என்பதும், அவா்களிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்து, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். இதேபோல, பாலக்கரை முதலியாா் சத்திரம் ஆலம் தெரு சந்திப்பு பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற நைனா முகமது என்பவரையும் கைது செய்து, அவரிடம் இருந்து போதை மாத்திரைகள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.