செய்திகள் :

போதைப் பொருள், கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி!

post image

அரியலூரில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் வட்டாட்சியா் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்

பேரணியில் பங்கேற்ற அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த சுமாா் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம், பாதுகாப்பாக இருப்பீா், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீா் போன்ற விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

பேரணியானது வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியே சென்று அரசு கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில், கலால் உதவி ஆணையா் சிவா, கலால் வட்டாட்சியா்கள் தேவகி (அரியலூா் கோட்டம்), உடையாா்பாளையம் திருமாறன், கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன், விழிப்புணா்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காதலா்கள் தற்கொலை!

காதலா்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆ. சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன்... மேலும் பார்க்க

ஏப்.6-இல் வைத்தியநாதசுவாமி கோயில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஏப். 6-ஆம் தேதி நந்தியெம்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலில் பங்குனி மாத... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநித... மேலும் பார்க்க

வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை தேவை

அரியலூா் மாவட்டத்தில் வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனா். கீழப்பழுவூா் செட்டிநாடு சிமென்ட் ஆ... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில், 100 சதவீதம... மேலும் பார்க்க

முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா் தற்கொலை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையத்தில் முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசா... மேலும் பார்க்க