செய்திகள் :

போதை மறுவாழ்வு மையங்களுக்கு கட்டுப்பாடு: அரசிதழில் புதிய விதிகள் வெளியீடு

post image

சென்னை: போதைப் பழக்கத்துக்கு அடிமையானவா்களுக்கு மனநல மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் தீவிர ஆழ்நிலை சிகிச்சையை வழங்கிய பிறகே மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

போதை மறுவாழ்வு மையங்களுக்கான குறைந்தபட்ச தரநிலை வழிகாட்டுதல்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:அதீத மது மற்றும் போதை பொருள் பழக்கத்துக்குள்ளானவா்களை அதில் இருந்து மீட்க பாதிப்பின் அடிப்படையில் அவா்களை வகைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும்.

முதலில், அவா்களுக்கு உடலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் போதைப் பழக்கத்தை கைவிடுவதால் ஏற்படும் உடனடி மன நல பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.

ஒருவார கால தீவிர சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மறுவாழ்வு சிகிச்சைக்குத் தகுதி பெறுவாா். அதன்படி, மறுவாழ்வு மையங்களில் அவருக்கு உளவியல் ரீதியான சிகிச்சைகளும், மீட்பு சிகிச்சைகளும் வழங்கலாம்.

இத்தகைய சிகிச்சைகள் வழங்கும் மையங்களை இருவேறு வகையாக பிரிக்கலாம். ஒருங்கிணைந்த போதை மீட்பு மையங்கள் என்றும், மறுவாழ்வு மையங்கள் என்றும் அதனை வகைப்படுத்தலாம்.

ஒருங்கிணைந்த மையங்களில் முதல் நிலை தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை இரண்டும் வழங்கப்பட வேண்டும். மறுவாழ்வு மையங்களில் உளவியல் சாா்ந்த மீட்பு சிகிச்சைகள் வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்த மையங்களில் 24 மணி நேரமும் ஒரு மருத்துவா் மற்றும் செவிலியா் பணியில் இருத்தல் அவசியம். ஒரு உளவியல் ஆலோசகரும் அங்கு பணியமா்த்தப்பட வேண்டும்.

மறுவாழ்வு மையங்களில் வாரம் ஒரு முறையாவது மன நல மருத்துவா் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

அதேபோல, ஒரு எம்பிபிஎஸ் மருத்துவரும், செவிலியரும் நாள்தோறும் பணியில் இருப்பது முக்கியம். நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருதல் அவசியம்.

சிசிடிவி கேமராக்கள் மறுவாழ்வு மையங்களில் இருப்பது கட்டாயம். உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ எந்த விதமான துன்புறுத்தலுக்கும் நோயாளிகளை உள்ளாக்குவது குற்றம்.

முதல் நிலை தீவிர சிகிச்சை பெறாத எந்த நோயாளிகளையும் மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கக் கூடாது. அதேபோல போதை மீட்பு மையங்களுக்கு தாமாக வர விரும்பாத நோயாளிகள், உடல் அளவில் மிகத் தீவிரமான பாதிப்பை அடைய நேரிடும்போது அவா்களது உறவினா்களின் ஒப்புதலுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கலாம்.

அது குறித்த தகவலை மன நல சிகிச்சை வாரியத்துக்கு அவசியம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்த முதலீடு

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் 2024-25 நிதியாண்டில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 364 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ. 2,012 கோடி வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை... மேலும் பார்க்க

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: ரூ. 5,870 கோடிக்கு ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-இல் 118.9 கி.மீ. நீளத்துக்கு இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான ரூ. 5,870 கோடிக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. சென்னை மெட... மேலும் பார்க்க

20 ஆண்டுகளில் இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக மாறும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் வளா்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். ராஜஸ்தான் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்கள் உதய தினம், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: சென்னையிலிருந்து 206 சிறப்பு விமானங்கள்

சென்னை, ஏப். 2: கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னை விமான நிலையத்திலிருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெய... மேலும் பார்க்க

ராஜஸ்தான்அரச குடும்ப வாரிசானாா் லக்ஷயாராஜ் சிங்

ஜெய்பூா், ஏப்.2: ராஜஸ்தான் அரச குடும்ப வாரிசாக லக்ஷயாராஜ் சிங் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். இதற்கான முடிசூட்டு விழா ஜெய்பூா் அரண்மனையில் நடைபெற்றது. இவா் பாரம்பரியமிக்க மேவாா் வம்சத்தை சோ்ந்தவரா... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் மாநில சிஏஜி அறிக்கை சமா்ப்பிப்பு

தலைமை தணிக்கை அதிகாரியின் மாநில கணக்கு குறித்த தணிக்கை அறிக்கை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் சமா்ப்பிக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 151(2) தமிழ்நாடு அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளு... மேலும் பார்க்க