தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை
போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!
ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இருவரும் விரைவில் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தையத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் விரைவில் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்கள் இருவருக்குமான சந்திப்பு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ‘முதல் படி’ என்று கூறினார்.
உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படுவது குறித்து மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நேற்று(ஆக. 18) நள்ளிரவில் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில், அமெரிக்க, உக்ரைன், ஐரோப்பிய தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையில், பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் பிரைடுரிச் மெர்ஸ், பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஊர்சுலா வோன் டெர் லெயென், நேட்டோ கூட்டமைப்பின் தலைவர் மார்க் ரூட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.