செய்திகள் :

போர் பாதுகாப்பு ஒத்திகை: தில்லியில் இன்று மின்சாரம் துண்டிப்பு!

post image

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லியில் இன்று (மே 7) இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லியில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை 15 நிமிடங்களுக்கு மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இன்று மாலை நடைபெற்ற போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் சூழலின்போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து மக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

நாடு முழுவதும் இன்று (மே 7) மாலை பெரும்பாலான மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு இந்தியா பதில் தாக்குதலை நடத்திய நிலையில், போர் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.

தலைநகர் தில்லி, மும்பை, சென்னை, புணே போன்ற பெரு நகரங்களிலும் ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற எல்லையோர மாநிலங்களிலும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

ஆபரேஷன் சிந்தூர்

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் சுற்றுலாத் தளத்தின் பைசாரன் பள்ளத்தாக்கில் ஏப். 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 13 நாள்கள் கழித்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் எல்லை மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை (மே 6) நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!

ஆபரேஷன் சிந்தூரில் என்ன நடந்தது? 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி! - முப்படை அதிகாரிகள்

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று(மே 11) மாலை செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.அவர் தெரிவித்திருப்பதாவது: “ஆபரேஷன்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்காக காஷ்மீரில் நிவாரண முகாம்கள்

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவியதைத் தொடர்ந்து, அங்கு எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் வசித்துவந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி தர இந்திய ராணுவத்துக்கு முழு அதிகாரம்!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவ கமாண்டர்களுக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மேற்கு எல்லையில் ராணுவ தளபதிகள் உடன் தலைமை தளபதி உபேந்திர திவேதி ஞாயிற்று... மேலும் பார்க்க

எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை: மத்திய அரசு

புது தில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் இன்று(மே 11) மாலை தெரிவித்துள்ளன. மேலும் பார்க்க

பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

புது தில்லி: பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லக்னௌ நகரில் நிறுவப்பட்டுள்ள ‘பிரம்மோஸ் வான்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைக்கூடத்தை’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ச... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்!

புது தில்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை உடனடியாகக் கூட்ட பிரதமருக்கு நாடாளுமன்ற இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களும் கடிதம் எழுதியுள்ளனர்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ... மேலும் பார்க்க