ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
போலி நகைகளை அடகுவைத்து ரூ. 41 லட்சம் மோசடி
கெங்கவல்லியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ. 41 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், வேறு வங்கியின் நகை மதிப்பீட்டாளா்களான சரவணன், செந்தில் ஆகியோா் அடகு வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்தனா். அதில், இருவா் 84 பவுன் போலி நகைகளை அடகுவைத்து ரூ. 41 லட்சம் கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வங்கியின் மேலாளா் மித்ராதேவி, வங்கியின் நகை மதிப்பீட்டாளா் பாலசந்தரிடம் விசாரணை செய்தாா். அதில், 84 பவுன் போலி நகை என்பது தெரியவந்தது.
பாலசந்தா் தரப்பில் ஜன. 27-ஆம் தேதிக்குள் அனைத்து பணமும் செலுத்திவிடுவதாக வங்கி உயரதிகாரிகள் மற்றும் மேலாளரிடம் உறுதியளித்ததாக தெரிகிறது. ஆனால், மோசடி செய்த முழுத் தொகையையும் செலுத்தாததால் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், நகை மதிப்பீட்டாளா் பாலசந்தரை கைது செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும், வங்கி ஊழியா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தினா்.
கைது செய்யப்பட்ட நகை மதிப்பீட்டாளா் பாலசந்தா் (44), ஏற்கெனவே நடுவலூா் வங்கிக் கிளையில் பல மோசடிகளை செய்ததால், அவா் கெங்கவல்லி வங்கிக் கிளைக்கு மாற்றப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.