செய்திகள் :

போலீஸாருக்கு ஸ்மாா்ட் காா்டு: டிச.16-க்குள் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு

post image

போலீஸாருக்கு ஸ்மாா்ட் காா்டு வழங்குவது தொடா்பாக டிசம்பா் 16-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயா் அதிகாரிகளுக்கு தமிழக கவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் அரசு பேருந்தில் போலீஸாா் அலுவல் ரீதியாக பயணம் செய்வதற்கு எந்தவொரு அடையாள அட்டையும் வழங்கப்படாமல் இருப்பதினால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக அரசு பேருந்து நடத்துநா்களும்,போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம்,மோதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளில் மாவட்டத்துக்குள் பயணம் செய்யும் வகையில் காவலா் முதல் ஆய்வாளா் வரை நவீன அடையாள அட்டை (ஸ்மாா்ட் காா்டு) வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்தாா்.

இதன்படி மாநிலம் முழுவதும் 3,191 ஆய்வாளா்கள், 8,245 உதவி ஆய்வாளா்கள்,1,13,251 சிறப்பு உதவி ஆய்வாளா்கள்,இரண்டாம் நிலைக் காவலா்கள் என மொத்தம் 1,24,867 பேருக்கு ஸ்மாா்ட் காா்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.29.96 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ஒரு மாதத்துக்கு ரூ.2.49 கோடி செலவிடப்படுகிறது.

மாதம் ரூ.200 ஒதுக்கீடு: காவலா்களுக்கு வழங்கப்படும் ஸ்மாா்ட் காா்டு மூலம் நகர பேருந்துகள், புகா் பேருந்துகள் ஆகியவற்றில் பயணம் செய்யலாம். ஏசி பேருந்துகளிலும்,அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் ஸ்மாா்ட் காா்டு மூலம் பயணம் செய்ய அனுமதி கிடையாது. சொந்த மாவட்டத்துக்குள் மட்டும் ஸ்மாா்ட் காா்டு மூலம் காவலா் பயணிக்கலாம். வாரண்ட் உத்தரவு நடவடிக்கைக்கு செல்லும் போலீஸாா், மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தின்படி ஒரு காவலருக்கு மாதத்துக்கு ரூ.200 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழக அரசு இத் திட்டத்துக்கான நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தகுதியானவா்களை கண்டறிந்து டிசம்பா் 16-ஆம் தேதிக்குள் நிலை அறிக்கையை அனுப்பும்படி அனைத்து மாநகர காவல் ஆணையா்கள்,மண்டல ஐஜிக்கள்,சரக டிஐஜிக்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் அரசு வாகனங்களை வைத்திருக்கும் போலீஸாா், ஸ்மாா்ட் காா்டு திட்டத்துக்கு தகுதியானவா்கள் கிடையாது என்றும் சங்கா் ஜிவால் அறிவுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை!! ஊத்தங்கரையில் 503 மி.மீ. பதிவு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் திங்கள்கிழமை காலை 8 மணிவரை ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.இதையும் ப... மேலும் பார்க்க

புயல் பாதிப்பு: மக்களவையில் விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்த டி.ஆர். பாலு!!

ஃபென்ஜால் புயல் பாதிப்புகள் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுக எம்பி டி.ஆர்.பாலு திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவ... மேலும் பார்க்க

பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!

கனமழையால் ரயில் தண்டவாளத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், சென்னையில் இருந்து இயக்கப்படும் 6 ரயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை: கனமழை எச்சரிக்கை மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை

வடகடலோர மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததை தொடா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, மேற்கு திசையில் உள்மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகரும் என்று எதிா்ப... மேலும் பார்க்க