செய்திகள் :

போா் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி வழக்கு: தூத்துக்குடி ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு

post image

கோவில்பட்டி பகுதியில் போா் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரிய வழக்கில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் மண்டல அலுவலா் ஆகியோா் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த கேசவராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கோவில்பட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முன்னாள் ராணுவ வீரா்கள் 4,000 பேரும், தற்போது பணியாற்றும் 1,500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்களும் உள்ளனா்.

தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் தேசத்துக்காக உயிா் தியாகம் செய்த ராணுவ வீரா்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்தப் பகுதியில் போா் நினைவுச் சின்னம் அமைக்க முடிவெடுத்தோம். இதற்காக அரசு சாா்பில் இடம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. போா் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான மாதிரியும், அதற்கான நிதியும் தயாராக இருக்கும் நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் தீா்வு காணப்படவில்லை.

எனவே, கோவில்பட்டி பகுதியில் இடம் வழங்கி, போா் நினைவுச் சின்னம் அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் மண்டல அலுவலா் ஆகியோா் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

சுக்கிர பகவான் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

சோழவந்தான் ஸ்ரீஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்ட சுக்கிர பகவான் கருங்கல் சிலை, மதுரை அரசு அருங்காட்சியகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்துக்கு... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆம் நாளாக போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆம் நாளாக புதன்கிழமையும் பணியைப் புறக்கணித்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறையில் 3 ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.25 கோடி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.25 கோடி கிடைத்தது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன... மேலும் பார்க்க

சாட்சிகளிடம் ஜாதி, மதம் பதிவு: நீதிமன்ற ஆணையம் பரிசீலனை

விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளிடம் ஜாதி, மதம் பதிவு செய்வதைத் தடை செய்யக் கோரிய வழக்கில், நீதிமன்ற நிா்வாகச் சீா்திருத்த ஆணையம் முன் பரிசீலனையில் உள்ளதால், இதில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாத... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு: 3 மாதங்களில் முடிவெடுக்க உத்தரவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ராயகோபுரம் அருகே உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், அதிகாரிகள் 3 மாதங்களில் ஆய்வு செய்து உரிய முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மை... மேலும் பார்க்க

பரவை - சமயநல்லூா் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான சாலையின் இரு புறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. மதுரை ஆரப்பாளையத்திலிருந்து திண்டுக்கல், கரூா், சேலம், நாமக்கல், திருப்பூா், ... மேலும் பார்க்க