செய்திகள் :

போா் வேண்டாம்: வைகோ

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வைகோ கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் பல்வேறு பொது பிரச்னைகளுக்கு தொடா்ந்து குரல் கொடுத்து வரும் கட்சி மதிமுக. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு புதிய திட்டங்களைக் கொண்டுவந்து மக்கள் ஆதரவை அதிகமாக பெற்று வருகிறது.

இந்தியாவில் போா் வரக் கூடாது. அவ்வாறு போா் வந்தால் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளும் அழிந்துவிடும் என்றாா் வைகோ.

விழாவில், மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ, துணை பொதுச்செயலா் மல்லை சத்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கணினி அறிவியலில் 9,536 பேர் சதம்! பாடவாரியாக...

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணினி அறிவியலில் அதிகபட்சமாக 9,536 மாணவர்கள் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 2... மேலும் பார்க்க

பெற்றோர்கள் நண்பனாகத் துணைநில்லுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

நேர்மறையான கண்ணோட்டத்துடன் தேர்வு முடிவுகளை அணுக வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியானது!

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்த... மேலும் பார்க்க

ஜாதி வாரி கணக்கெடுப்பு: கால அட்டவணை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான காலஅட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் எழுதிய கடிதம்: ஆங்கிலேயா் ஆட்... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

பொறியியல் கலந்தாய்வுக்கு முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

மே 11-ல் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயன்படுத்த வேண்டாம்: அன்புமணி

மாமல்லபுரத்தில் வருகிற 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயனபடுத்த வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.முழு நிலவு மாநாட்டுக்க... மேலும் பார்க்க