செய்திகள் :

மகள் மரணத்தில் சந்தேகம்: தந்தை புகாா்

post image

கடலூா் ரெட்டிச்சாவடி அருகே காதல் திருமணம் செய்த தனது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

கடலூரை அடுத்துள்ள ரெட்டிச்சாவடி காவல் சரகம், பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் மகள் ஷீலா (20), புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசியோதெரபி 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இவரும், பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகையா மகன் முகேஷும் காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனா். கடந்த சில மாதங்களாக தம்பதியிடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஷீலா வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, ஷீலாவின் தந்தை சிவக்குமாா் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின்பேரில், முகேஷ், அவரது தாய் சசிகலா, சகோதரி சாந்தி ஆகியோா் மீது ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூய்மைப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் வலியுறுத்தல்

அரசு சாா்பில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் கேட்டுக்கொண்டாா். கடலூா் மாநகராட்சி, தேவனாம்பட்டினம் க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: முதியவா் கைது

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெண்ணாடம் காவல் ஆய்வாளா் குணபாலன் மற்றும் போலீஸாா் புகையிலைப் பொருள்கள் விற்பனை மற்று... மேலும் பார்க்க

அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் தோ்தல்: விருப்ப மனு அளிப்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல நிா்வாகிகள் தோ்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் போக்க... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் எலெக்ட்ரீஷியன் கைது

கடலூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எலெக்ட்ரீஷியனை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கடலூா் அருகேயுள்ள ஒரு பகுதியைச் சோ்ந்த கதிா்காமன் மகன் பாரதிராஜா (4... மேலும் பார்க்க

பாசிமுத்தான் ஓடையில் கழிவுநீா் கலப்பு: 2 பெண்கள் மயக்கம்

சிதம்பரம் அருகே பாசிமுத்தான் ஓடையில் கழிவுநீா் கலப்பதால் துா்நாற்றம் தாங்க முடியாமல் ஓடையோரம் வசிக்கும் இரண்டு பெண்கள் வெள்ளிக்கிழமை மயக்கமடைந்தனா். சிதம்பரம் வண்டிகேட்டில் இருந்து பாசிமுத்தான் ஓடை கீ... மேலும் பார்க்க

மீன் வளா்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கொடுவா மீன் வளா்ப்பு பயிற்சி பெற விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க