செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் மோதும் மகா கூட்டணிகள்! வெற்றி யாருக்கு?

post image

மகாராஷ்டிரப் பேரவைக்கு மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, நவ. 23ஆம் தேதி சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனை, பாஜக, அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக்கொண்ட மகாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் பலப்பரீட்சையாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. 288 தொகுதிகளில் நான்காயிரத்து நூற்று நாற்பது வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் தற்போதைய பதவிக்காலம் நவம்பர் 26ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில்தான், நாளை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. நாளை மாலைக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல், மகாராஷ்டிர தேர்தல் பல வகைகளில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. நாட்டின் வணிக நகரமான மும்பையை உள்ளடக்கிய, மிகப்பெரிய சட்டப்பேரவையைக் கொண்டது. பொதுவாக வேட்பாளர்கள்தான் விஐபிக்களாக இருப்பார்கள். ஆனால், மகாராஷ்டிரத்தில் வாக்களிக்கும் ஏராளமான வாக்காளர்களே விஐபிக்கள்தான்.

நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு மகாராஷ்டிர பேரவைக்கு நடைபெற்ற தேர்தல்களிலேயே பதிவான அதிக வாக்குப்பதிவாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு, அதாவது 1995ஆம் ஆண்டு மிக அதிகபட்ச அளவாக 71.7 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

2024ஆம் ஆண்டு தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியிருப்பது யாருக்கு சாதகமாக அமையும் என்ற கேள்வியையும் எழுப்பியது. மகாயுதி கூட்டணியினரோ, தங்களுக்கே வெற்றி என்று மார்தட்டிக்கொண்டிருக்கும் நிலையில், வழக்கமான அளவைக் காட்டிலும் அதிக வாக்குகள் பதிவாவது, மக்கள் மாற்றத்தை விரும்புவதையே காட்டுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நாளை தெரிந்துவிடும். யார் சொல்வது உண்மை என்று .

வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரமாகவே உள்ளது. வாக்குச்சாவடி இருக்கும் இடம், காலநிலை, விடுமுறை, வேலை, முகவரி மாற்றம் போன்றவையும் வாக்களிப்பதை முடிவு செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், ஒரு தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரிப்பதற்கும் குறைவதற்கும், எந்தக் கட்சி வெற்றி பெறுகிறது என்பதற்கும் என்னதான் காரணமும் ஒற்றுமையும் இருக்கிறது என்பது இதுவரை அறியப்படாததாகவே இருந்துள்ளது.

1995ஆம் ஆண்டு 71 சதவீத வாக்குகள் பதிவான போது மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து சிவசேனை - பாஜக கூட்டணிக்கு ஆட்சி மாற்றம் நடந்தது. மிகக் குறைந்த வாக்குப்பதிவு நடந்த 2009ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்படவில்லை. அதே 2019ஆம் ஆண்டு 60 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

வாக்குப்பதிவு விவகாரம் இப்படியிருக்க, ஏற்கனவே ஆளுங்கட்சியின் மகாயுதி கூட்டணி, 2024 மக்களவைத் தேர்தலில் மகா விகாஸ் கூட்டணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்த போக்கு, பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என மகா விகாஸ் கூட்டணி நம்பிக்கையோடு இருக்கிறது.

ஆனால், மகாராஷ்டிரத்தில் எப்போதெல்லாம் வாக்குப்பதிவு அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் பாஜகதான் பலன் பெற்றிருக்கிறது என்கிறார் மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ்.

இதனிடையே, பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜக - சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கூறியிருக்கின்றன. சில கருத்துக் கணிப்புகள் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கதுதான். ஒரு கணிப்புத்தான் மகா விகாஸ் யுதிக்கு ஆதரவாக அமைந்திருக்கிறது. ஆனால், மக்களின் எண்ணங்களை இந்த கருத்துக் கணிப்புகள் உண்மையிலேயே கணித்திருக்கின்றதா என்பதை இப்போதைக்கு உறுதி செய்ய யாராலும் இயலாது.

அடுத்த முதல்வரை உறுதி செய்வதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவிருக்கும் நிலையில், அந்த பரபரப்பு ஒரு பக்கம் ஏற்பட்டிருந்தாலும், மறுபக்கம், மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாதி அணிகளுக்குள் யார் அடுத்த முதல்வர் என்ற அரியணைக்கான போட்டியும் சலசலப்பும் ஏற்கனவே தொடங்கிவிட்டிருக்கிறது. இரு கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், தங்கள் கட்சித் தலைவர்களே அடுத்த முதல்வர் என்று கூறி வருகிறார்கள். புனேவில், அடுத்த முதல்வர் அஜித் பவார் என்று பேனரே வைத்துவிட்டார்கள். சர்ச்சையானதைத் தொடர்ந்து அது அகற்றப்பட்டது. இந்தக் கூட்டணியில், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னவீஸ், அஜித் பவார் அனைவருமே முதல்வர் போட்டியில் உள்ளனர்.

மகாவிகாஸ் கூட்டணியில் காங்கிரஸ் மாநில தலைவர் நானா படேல், உத்தவ் தாக்கரே ஆகியோர் முதல்வர் போட்டியில் இருந்தாலும், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர் தேர்வு என்று உத்தவ் தாக்கரே தரப்பிலிருந்து பதிலாக வருகிறது.

மகாராஷ்டிர தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நவம்பர் 23ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனை தேர்தல் ஆணையம் உடனுக்குடன் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவிருக்கிறது.

மணிப்பூரில் அமைதியைக் காக்க மேலும் ஆயுதப்படைகள் தேவை: மாநில பாதுகாப்பு ஆலோசகர்!

மணிப்பூரில் அமைதியைக் காக்க அதிகளவிலான மத்திய காவல் ஆயுதப் படைகள் தேவை என்று மாநில பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் கூறுகையில், “இன்று(நவ.22), நாங... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பழைய கண்ணிவெடி பாதுகாப்பாக அகற்றம்

ஜம்மு-காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கண்ணிவெடியை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை செயலிழக்கச் செய்தனர்.ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் புல்புர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் வியாழ... மேலும் பார்க்க

இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பலுடன் மோதிய மீன்பிடி படகு: 2 மீனவர்கள் மாயம்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடி படகு மோதியதில் 2 மீனவர்கள் மாயமானதாக அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கோவா கடற்கரையில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் மர்தோமா என்ற படகில் இந்திய மீ... மேலும் பார்க்க

அதிகரிக்கும் மாயை வேலைவாய்ப்புகள்! எதற்காக இந்த மாயை வேலைவாய்ப்புகள்?

தற்போதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக போலி வேலைவாய்ப்புகளை அறிவிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் நல்ல வேலை கிடப்பது என்பது குதிரைக்கொம்புபோல் ஆகிவிட்டது என்று வேலை ... மேலும் பார்க்க

பெண்களுக்கு மாதம் ரூ.1,000, இலவச மின்சாரம்! கேஜரிவால் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், அடுத்தாண்டு நடைபெறும் தில்லி பேரவைத் தேர்தலுக்கான முக்கிய வாக்குறுதிகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.தில்ல... மேலும் பார்க்க

உ.பி. இடைத்தேர்தலில் 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும்: அகிலேஷ் யாதவ்

உ.பி.யில் இடைத்தேர்தல் நடந்த 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும் என்று சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஜெய்ப்பூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தேர்தலுக்கு பி... மேலும் பார்க்க