செய்திகள் :

மகாராஷ்டிரா: ``அரசு திட்டங்களை சமூக ஊடகங்களில் விமர்சிக்கக்கூடாது'' - அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

post image

மகாராஷ்டிரா பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி அறிமுகம் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதோடு இந்தி திணிப்புக்கு எதிராக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே ஆகியோர் பல ஆண்டுகளுக்கு ஒன்று சேர்ந்து போர்க்கொடிதூக்கினர். இது மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியில்லாமல் இந்தி திணிப்பை கைவிடுவதாக மாநில அரசு அறிவித்தது.

இதே போன்று மாநில சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள் அடிக்கடி எதையாவது செய்து சர்ச்சையில் சிக்கிக்கொள்கின்றனர்.

அவற்றை பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களில் அரசு ஊழியர்களும் அடங்கும். அரசு ஊழியர்களே அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநில அரசு தனது ஊழியர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.

அந்த உத்தரவில், மாநில அரசின் நடப்பு திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து சமூக ஊடக பக்கத்தில் விமர்சிக்கக்கூடாது. அரசின் ஒப்புதல் இல்லாமல் அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை பகிரக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் தடை விதித்த வெப்சைட், மொபைல் ஆப் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

social media - சோஷியல் மீடியா

இந்த விதிகளை மீறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு மாநில அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அரசு சார்பு நிறுவனங்கள், அரசு வாரியத்தில் பணியாற்றுபவர்களுக்கும் பொருந்தும்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால், ரகசியத் தகவல்களைப் பரப்புதல், தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற சில ஆபத்துகள் உள்ளது. அரசு கொள்கைகள் அல்லது எந்தவொரு அரசியல் நிகழ்வு அல்லது அரசு அதிகாரிகள் தவறு செய்யும் போது மோசமாக விமர்சனம் செய்வது போன்ற செயல்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்காணிக்கப்படுகிறது''என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறிக்கப்பட்ட இலாகா!

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மழை காலக்கூட்டத்தொடர் கடந்த வாரம் மும்பையில் நடந்தது. இக்கூட்டத்தொடரின் போது தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சியின் வேளாண்மை துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே தனது மொபைல் போ... மேலும் பார்க்க

Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை |ஜூலை 31 ரவுண்ட்அப்

ஜூலை 31 - டாப் செய்திகள்!* திருநெல்வேலி கவின்குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் காதலி, தாங்கள் இருவரும் உண்மையாகக் காதலித்ததாகவும், தங்களின் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம்... மேலும் பார்க்க

சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவைக்கும் வீடியோ!

சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் இன்று கோர விபத்து நடந்துள்ளது. '360 டிகிரி' எனப்படும் ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இயக்கத்தின்போது திடீரென உடைந்து விழுந்ததில் 26 பேர... மேலும் பார்க்க

Kerala: கல்லறைகளில் இடம்பெறும் QR கோடு - என்ன காரணம் தெரியுமா?

கேரளாவில் உள்ள கல்லறை ஒன்றில், உலோகத்தால் ஆன QR கோடு உருவாக்கப்பட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அந்த கோட்டை யாராவது தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால், அந்தக் கல்லறையில் இருக்கும் நபரின் வாழ்க்கை, நினைவுகள்... மேலும் பார்க்க

’2 பேருமே தத்தெடுக்கப்பட்டவர்கள் தான்’ - தந்தை சொத்தில் பங்கு கேட்ட பிள்ளைகள் ஷாக்!

சீனாவின் தியான்ஜின் நகரில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இறந்த தந்தையின் ரூ.3.6 கோடி (மூன்று மில்லியன் யுவான்) சொத்துக்காக அண்ணன், தங்கை இருவருமே சண்டையிட்டுக் கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் அவரத... மேலும் பார்க்க

TCS: சிஇஓ முதல் நிர்வாக இயக்குநர் வரை - வைரலாகும் TCS நிறுவன அதிகாரிகளின் சம்பள பட்டியல்

உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடாவின் டிசிஎஸ் (TCS) நிறுவனம், தனது உலகளாவிய ஊழியர்களில் 2 சதவீதத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. டிசிஎஸ் (TC... மேலும் பார்க்க