செய்திகள் :

மகாராஷ்டிரா: `இவர்கள் எல்லாம் நீக்கப்படுவார்கள்..!’ - பெண்கள் நிதியுதவித் திட்டத்தில் அஜித் பவார்

post image

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, `முக்கிய மந்திரி லட்ஹி பெஹின் யோஜனா’ எனப்படும் பெண்களுக்கு மாதம் ரூ.1500 கொடுக்கும் திட்டத்தை மாநில அரசு அவசரமாக அறிவித்தது. அப்போது இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1500 வீதம் வரவைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இத்திட்டத்தால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.46 ஆயிரம் கோடி அளவுக்கு செலவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மாநிலத்தில் மற்ற வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இத்திட்டத்தில் பயனடைந்து வருபவர்களை மறு ஆய்வு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு குறைவான வருவாய் இருக்கும் 65 வயதுக்கு குறைவான பெண்களுக்கு இந்த நிதியுதவி குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

ஆனால் இப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் இந்த உதவித்தொகையை வாங்கிக்கொண்டிருக்கின்றனர். இதையடுத்து வசதி படைத்த பெண்கள் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் அஜித்பவார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சட்டமன்றத்தில் பேசுகையில்,'' அவசரம் மற்றும் குழப்பத்தில் வசதி படைத்த சில சகோதரிகள் பெண்கள் நிதியுதவி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏழைகள் மட்டும் இத்திட்டத்தில் பயனடையும் வகையில் இத்திட்டத்தில் திருத்தம் செய்யப்படும். ஆனால் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கமாட்டோம். இத்திட்டத்தை நிறுத்தமாட்டோம். இத்திட்டத்திற்கு தேவையான நிதி இருக்கிறது.

ஏழை பெண்கள் 100 சதவீதம் இத்திட்டத்தில் பயனடைவார்கள். இத்திட்டத்தில் இருக்கும் பெண்கள் சொந்த தொழில் செய்து சொந்தமாக சம்பாதிக்க ரூ.10,000 முதல் 25,000 வரை கடன்களும் கொடுக்கப்படும். மும்பை வங்கி, கூட்டுறவு வங்கிகள், பெண்கள் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் இந்த கடனுதவி வழங்கப்படும்''என்று தெரிவித்தார்.

அஜித்பவாரின் இந்த அறிவிப்பால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாநில அரசு ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. எனவே முக்கிய மந்திரி லட்ஹி பெஹின் யோஜனா திட்டத்தில் திருத்தம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

"50 ஆண்டுகால வேண்டுதல்; சபரிமலை 18-ஆம் படியேறி தரிசனம்"- செளமியா அன்புமணி ஆனந்தக் கண்ணீர்

கேரள சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சமயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து 18ம் படி ஏறி ஐய்யப்பனை தரிசிக்கச் செல்வார்கள்.சௌமிய... மேலும் பார்க்க

Sunita Williams: விண்வெளிக்கு `சமோசா' `பகவத்கீதை' எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்; காரணம் இதுதான்

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக பயணித்து வரும் நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோர் ஆகியோரை பூமிக்கு தஅழைத்து வர டிராகன் விண்கலன் அனுப்பப்பட்ட... மேலும் பார்க்க

'கொரோனா முதல் ராணி எலிசபெத் மரணம் வரை...' - புதிய நாஸ்ட்ரடாமஸ்ஸின் லேட்டஸ்ட் கணிப்பு

இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது நாடி ஜோதிடம். இந்த நாடி ஜோதிடத்தின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த கிரெய்க் ஹாமில்டன்-பார்க்கர் பல எதிர்கால விஷயங்களை கணித்துக் கூறி வருகிறார். இவர் கூறுவது நடக்கிறது எனப்... மேலும் பார்க்க

`ரூ.434 கோடி இழப்பீடு'- டெலிவரி ஊழியருக்கு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு! - என்ன நடந்தது?

கலிபோர்னியாவில் உள்ள நடுவர் மன்றம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தால் காயமடைந்த டெலிவரி ஓட்டுநருக்கு, இந்திய மதிப்பில் 434.78 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்ட சூ... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: `சாம்பியன்ஸ் டிராபி வெற்றி டு தமிழக பட்ஜெட்' - இந்த வார கேள்விகள்!

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்களை மத்திய அமைச்சர் கடுமையாக விமர்சித்தது, தமிழக பட்ஜெட் போன்ற அரசியல் நிகழ்வுகள் உட்பட விளையாட்டு, சினிமா என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப... மேலும் பார்க்க

கும்பமேளா: 45 நாள்களில் ரூ.30 கோடி; யோகி பாராட்டிய படகு உரிமையாளர் -`ரூ.12 கோடி' கட்ட ஐ.டி நோட்டீஸ்!

உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளா 45 நாள்கள் விமரிசையாக நடந்து சிவராத்திரியோடு முடிவுக்கு வந்துள்ளது. இக்கும்பமேளா குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டமன்றத்தில் அளித்த பதிலில், ''கும்பமேளாவில் பி... மேலும் பார்க்க