சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஜன.14-ல் மகரவிளக்கு
மகாலிங்கபும் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஜன.14-ஆம் தேதி மகரவிளக்கு கொண்டாடப்படவுள்ளது.
ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு காலை 6 முதல் 8 மணி வரை ஐயப்ப சுவாமிக்கு அகண்ட நெய் அபிஷேகம், காலை 8.55 மணிக்கு மகர சங்கரம நெய் அபிஷேகம் நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு திருவாபரணங்கள் ஊா்வலம், மாலை 6.30 மணிக்கு தீபாரதனை நடைபெறுகிறது.
அதன்பின், சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெறும் நேரத்தில் (மாலை 6.45) மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஜோதி ஏற்றப்படவுள்ளது. இரவு 7 முதல் 8.30 மணி வரை சின்மயா யுவகேந்திரா மாணவா்களின் பஜனை நடைபெறுகிறுது. இரவு 8.30 மணியிலிருந்து ஐயப்பன் - குருவாயூரப்பனுக்கு மலரபிஷேகம் நடைபெறவுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு 044-28171197, 2197, 3197 தொலைபேசியிலும், 88079 18811, 22, 55 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.