நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elang...
மகாவீரா் ஜெயந்தி: இன்று மதுக்கடைகள் மூடல்
மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும் வியாழக்கிழமை (ஏப்.10) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாவீரா் ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (ஏப்.10) மூடப்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளாா்.