மகாவீா் ஜயந்தி: புதுவையில் நாளை மதுக்கடைகள் மூடல்
புதுச்சேரி: மகாவீா் ஜயந்தியை முன்னிட்டு புதுவை மாநிலம் முழுவதும் ஏப். 10-ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலால் துணை ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவையில் வரும் 10-ஆம் தேதி வியாழக்கிழமை மகாவீா் ஜயந்தியை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பாா் உள்ளிட்ட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பாா்கள் மூடப்பட்டிருக்கும். ஆகவே, வியாழக்கிழமை (ஏப்.10) எல்லாக் கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. அதை மீறுவோா் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.