ஆஸி. ஓபன்: இந்திய வம்சாவளி இளம் வீரருக்கு ஜோகோவிச் பாராட்டு!
மகா கும்பமேளாவால் ரூ.2,000,000,000,000 வருவாய் ஈட்டும் உ.பி.!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று தொடங்கியிருக்கும் மகா கும்ப மேளாவில் முதல் நாளிலேயே 50 லட்சம் பக்தர்கள் சங்கமம் பகுதியில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சேரும் சங்கமம் இடத்தில் இன்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருவிழாக்களில் உலகமே பேசும் மகா கும்ப மேளாவுக்கான முன்னேற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு வெகு விமரிசையாக செய்திருக்கும் நிலையில், இதன் மூலம் ரூ.2 லட்சம் கோடியை வருவாயாக ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷியா மட்டுமல்லாமல் ஏராளமான வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியா வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த மகா கும்ப மேளாவில் கிட்டத்தட்ட 40 கோடி பேர் பிரயாக்ராஜ் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த 40 கோடி பேரும், உத்தரப்பிரதேசத்துக்குள் வந்து தங்கிச் செல்லும் போது, குறைந்தபட்சம் தலா ரூ.5,000 செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருந்தால் உத்தரப்பிரதேச அரசின் வருவாய் ரூ.2 லட்சம் கோடியாக இருக்கும். ஒருவேளை, ஒரு பக்தர் ரூ.10000 செலவிட்டால் மொத்த வருவாய் ரூ.4 லட்சம் கோடியாக இது உயரும் என்று கூறப்படுகிறது.
மகா கும்ப மேளா திருவிழாவின்போது, சங்கமம் பகுதியில் மக்கள் புனித நீராடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்ப மேளா நடைபெறுகிறது. 4000 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெறும் இந்த திருவிழா பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இந்த மகா கும்ப மேளா நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 45 நாள்களும் சிறப்பு ஏற்பாடுகள், ஏழு அடுக்குப் பாதுகாப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.