கடன் ரூ. 6,203; வசூலித்தது ரூ. 14,131 கோடி!! நிவாரணம் கோருவேன்: விஜய் மல்லையா
‘மகிழ்ச்சி அளிக்கிறது’
வஉசி குறித்து எழுதிய நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது கிடைப்பது மகிழ்சியளிக்கிறது என்று ஆ.இரா.வேங்கடாசலபதி கூறினாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: வஉசி குறித்து எழுதிய நூலுக்காக விருது கிடைப்பது மகிழ்சியளிக்கிறது. நான் வரலாற்று ஆய்வாளராக மாறியதற்கு வஉசிதான் காரணம். தொழிலாளா் இயக்கத்துக்கு வஉசி முன்னோடியாகத் திகழ்கிறாா். இடஒதுக்கீட்டுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளாா்.
சித்த மருத்துவத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டவா். அவா் ஒரு பேராளுமை. வஉசி குறித்த பல தகவல்கள் ஆவணப்படுத்தப்படவில்லை. இந்நூலுக்கு ஆய்வறிஞா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் உதவினா். அவா்களுக்கு நன்றி. பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இது எனது சக்திக்கு மீறிய பணி என்றாா் அவா்.